குயின்ஸ்லேன்டில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது!

28
அவுஸ்ரேலியாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் ஐந்தாவது மாநிலமாக குயின்ஸ்லேன்ட் அமைந்துள்ளது.

அவுஸ்ரேலியாவின் பிரபல மாநிலமாக குயின்ஸ்லேன்டில் நேற்று (புதன்கிழமை) கருக்கலைப்பானது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டிலிருந்து உறுதியான கருக்கலைப்புத் தடைச்சட்டத்தைக் கொண்டிருந்த குயின்ஸ்லேன்ட் மாநிலம், பெண்களின் உரிமைகள் தலைதூக்கியமையை அடுத்து நேற்று குறித்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

எனினும், பொருளாதார, சமூக கட்டமைப்புப் பிரச்சினைகளுக்காக கடந்த 1960 கள், 1970 களில் பொதுச்சட்டத்தை பிரதானமாகக் கொண்டு ஆட்சியை முன்னெடுத்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மருத்து காரணிகளின் உதவியுடன் கருக்கலைப்பு சட்டபூர்வமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நே்று அமுலுக்குவந்த குறித்த புதிய சட்டத்தின் கீழ், 22 வாரங்களுக்குள் தாய்க்கு எந்தவித பாதிப்புமின்றி கருக்கலைப்பை மேற்கொள்ள முடியும்.

இச்சட்டத்தை நிறைவேற்ற மேற்கொண்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 50 இல் 41 வாக்குகள் கருக்கலைப்பிற்குச் சாதகமாகி பாரிய பங்கினரின் உடன்பாட்டில் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

SHARE