வெனிசுவேலாவில் 7 சடலங்கள் கண்டெடுப்பு!

28
வெனிசுவேலாவின் தங்கச்சுரங்கத்திற்கு அருகிலுள்ள கிராமப்பகுதியில் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தென்கிழக்குப் வெனிசுவேலாவின் தங்கச்சுரங்கத்திற்கு அருகிலுள்ள காடொன்றில் அந்நாட்டு இராணுவ வீரர்களினால் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

வெனிசுவேலா நாட்டில்  வறுமை காரணமாக சட்டவிரோதமாக தங்க அகழ்வுகள் மேற்கொள்வதினானேலேயே இவ்வாறான உயிரிழப்புக்கள் அதிகம் இடம்பெறுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த பகுதியில் வாழும் மக்களின் சட்டவிரோத தங்க அகழ்வைத் தடுக்க அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவ அதிகாரிகளின் மீது மக்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த குற்றச்சாட்டிற்கு இராணுவ அதிகாரிகள் இதுவரை பதிலளிக்காமை குறிப்பிடத்தக்கது.

SHARE