மன்னார் வலய கல்வி பணிப்பாளருக்கு மாபொரும் மணிவிழா

48
மன்னார் நகர் நிருபர் 
மன்னார் அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடுக்கல்வி வலய அதிகாரிகள் இணைந்து மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற இருக்கும் திருமதி.சுகந்தி செபஸ்ரியன் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மணிவிழா நிகழ்வானது 18-10-2018 நேற்று புதன்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமாகி தேசிய பாடசாலைகளின் பான்ட் இசையுடன் விருந்தினர்களுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக இன்னியம் முழங்க விழாமேடையில் தமிழ் தாய் வாழ்த்தொழிக்க மங்களவிளக்கேற்றலுடன் அரம்பமானது.
குறித்த நிகழ்விற்கு, வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏனைய மாவட்ட  கல்விப்பணிப்பாளர்கள் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை அருட்தந்தையுடன் ஏனைய அருட்தந்தையர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் சர்வமதத்தலைவர்கள் அரச அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
திருமதி.சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் கல்விப்பணியும் ஆளுமைப்பண்பும் திறமையன முகாமைத்துவ செயற்பாடும் சேவை நலனும் கவிதைகளாகவும் பாடல்களாக ஆசிரியர்களாலும் அதிபர்களாலும் வாழ்த்துப்பாக்களாக இசைக்கப்பட்டது.
.
இவ் நிகழ்வின் சிறப்பம்சமாக திருமதி.சுகந்தி செபஸ்ரியன் அவர்களின் 36 வருட கால கல்வி சேவையினை நினைவு கூறும் வகையில் மணிவிழா நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
திருமதி.சுகந்தி செபஸ்ரியன் 36 வருட கல்விபணியில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக வலயக்கல்விப்பணிப்பாளராக மடு மன்னார் மேலதிக கல்விப்பணிப்பாளராகவும் பிரதி செயலாளராகவும் யுத்தகாலத்தில் வடக்குமாகாணத்தில் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்கது.
SHARE