மன்னார் மாந்தை புதைகுழி அருகில் காணப்பட்ட இராணுவமுகம் காணி விடுவிப்பு

31
-மன்னார் நகர் நிருபர்-
வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க புதன் கிழமை(17) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி  பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம்  காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் புதன் கிழமை மாலை மன்னார் பிரதேசச் செயலாளரிம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச்செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணி   சுமார் 28 வருடங்களின் பின்னர்  புதன் கிழமை (17) உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி, மற்றும் வைத்திய சாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்தார்.
 (17) புதன் கிழமை மாலை குறித்த காணி சட்ட ரீதியாக இராணுவ அதிகாரியினால் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி.சிவசம்பு கணகாம்பிகை அவர்களிடம் கையிக்கப்பட்டது. இதன் போது குறித்த பகுதிக்கான கிராம அலுவலகரும் கலந்து கொண்டிருந்ததாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த விடுவிக்கப்படட் இராணுவ முகாமுக்கு அருகிலும் சில தனியாருக்கு சொந்தமான காணிகள் காணப்படுகின்ற போது குறித்த மக்கள் காணி பகுதியில் பௌத்த விகாரை காணப்படுவதனால் அவை விடுவிக்கப்படவில்லை  என்பது குறிப்பிடதக்கது.
SHARE