பாடசாலை அபிவருத்திக்கு உதவி வழங்கும் நிகழ்வு

39
மன்னார் நகர் நிருபர்
புளுஸ் அபிவிருத்தி அமைப்பினால்  காலை 08.00 மணியளவில் மன் கணேசபுரம் ஆரம்ப பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் விசேட நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி.கவிதா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார், மடு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி. S.S.செபஸ்ரியான் அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக மடு கல்வி வலயத்தினை புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் திரு.சத்தியபாலன் மற்றும் மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோருடன் விருந்தினராக தேவன்பிட்டி பங்குத்தந்தை, ஆலயக் குருக்கள், பொலிஸ் பிரதிநிதி மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது புளுஸ் அபிவிருத்தி அமைப்பினால் தற்பொழுது முன்னெடுக்கப்பட்ட பாடசாலை வளாகப் புனரமைப்பு முட்கம்பி வேலி ஆகியன கையலிக்கும் நிகழ்வும் அதன் வேலைத்திட்டம் அடங்கிய பெயர்ப்பலகை புதிய மடு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. சத்தியபாலன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலைக்கு புளுஸ் அபிவிருத்தி அமைப்பினால் போட்டோ பிரதி இயந்திரம், மாணவர்களுக்கான தைத்த சீருடை வழங்கி வைக்கப்பட்டதோடு மாணவர் தலைவர்களுக்கான சின்னங்களும் சூட்டப்பட்டது. இதன்போது விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்று த.தென்றல்மாறனின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. குறித்த வேலை திட்டத்திற்கான நிதியானது புலம்பெயர்ந்த இலங்கை தமிழ் உறவுகளால் வழங்கிவைக்கப்பட்டது அத்துடன் மேலதிக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற உதவிகள் வழங்கப்படவுள்ளதும்  குறிப்பிடதக்கது.
SHARE