அடுத்த மாதம் எரிபொருள் விலை குறைவடையலாம்

34

எரிபொருள் விலை தொடர்பில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திர ம திப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 6 டொலர்களினால் குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றமானது பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாகவே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE