கஞ்சா போதைப் பொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கனேடியர்கள்!

25
கனடா வர்த்தக ரீதியாக கஞ்சா போதைப் பொருளை விநியோகிக்கும் முதலாவது நாடாக உருப்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தொடக்கம் Weed எனப்படும் கஞ்சா மூலிகை, கேளிக்கை மற்றும் பொது நுகர்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கை குறித்து டொரொண்டோ மற்றும் வான்கூவர் போன்ற பெரு நகரங்களில் எதிர்ப்பு குரல்களும் வலுப்பெற்று வருகின்றமை கவனிக்கத்தக்கது.

அந்த நகரங்களில் கஞ்சா போதைப் பொருளை விநியோகிக்கும் எந்தவொரு வியாபார நிலையமும் திறந்துவைக்கப்படவில்லை.

ஆனால், கனடாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரேடாரில் கஞ்சாவை அதீதமாக விரும்பும் தரப்பினர் நள்ளிரவிலும் முதன்முதலில் விற்பனையை ஆரம்பித்து வைத்தனர்.

குளிரையும், காற்றையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்காணக்கானவர்கள் மாகாணத்தின் தலைநகர் சென். ஜோன்ஸில் உள்ள கெனோபி க்ரோவ்த் கூட்டுத்தாபனத்தின் டுவீட் பிரான்ட் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அணிவகுத்து காத்திருந்தனர்.

இந்த நிறுவனமே உலகின் அங்கீகரிக்கப்பட்ட கஞ்சா போதைப் பொருள் உற்பத்தி அமைப்பாகும்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக தடைசெய்யப்பட்ட பின்னர், வயதுவந்த கனேடியர்கள் பொழுதுபோக்காக கஞ்சா போதைப் பொருளை சட்டரீதியாக புகைக்க முடியும் என அனுமதிக்கப்பட்ட வரலாற்று நாளாக கடந்த புதன்கிழமையை கனேடியர்கள் கருதுகின்றனர்.

SHARE