இப் போட்டி தொடர்பான செய்தியாளர் மாநாடு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை இரானுவ ஹொக்கி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் அதிதியாக டி. எச். எல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சஜித் மடஹேவா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.23 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 6 பிரிவுகளாக இடம்பெறவுள்ளது.இச்சுற்றுத் தொடருக்கு பீப்பள்ஸ் லீசிங்,மாஸ் கோல்டிங்ஸ்,டி.எச்.எல்.ஹில்டன் கொழும்பு ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன.
கடந்த வருடம் ஏ டிவிசன் சம்பியனாக எச்.என்.பி குழுமம்,கொமர்சல் கிரடிட் ஆகியன இணைச் சம்பியனாக தெரிவானது.
பி டிவிசன் சம்பியனாக மாஸ் கோல்டிங்ஸ் அணியும் சி டிவிசன் சம்பியனாக ஹேய்லீஸ் அணியும் டி டிவிசன் சம்பியனாக எம்.ஜே.எப் டியேஸ் அணியும் அத்துடன் கடந்த வருடம் பெயார் பிளே விருது வழங்கப்படவில்லை.