இணையத்தை கலக்கும் வீடியோ

52

அபுதாபியில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வினோதமான முறையில் நடந்துள்ள ரன் அவுட் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனைதொடந்து 137 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. போட்டியின் நான்காவது நாளான இன்று அசார் அலி 64 ரன்களுடனும், அசாத் 4 ரன்களுடனும் களத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவுஸ்திரேலியாவின் பீட்டர் சிடில் வீசிய பந்தினை அசார் அலி சிலிப் திசையில் அடித்துவிட அது தேர்டு மேன்திசையில் பவுண்டரிக்கு நோக்கி வேகமாகச் சென்றது.

இதைப் பார்த்த அசார் அலி பந்து பவுண்டரிக்கு செல்கிறது என நினைத்து ரன் எடுக்காமல் நிதானமாக நடந்து ஆடுகளத்தின் நடுப்பகுதியில் வந்து அசாத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

இதனை பார்த்த ஸ்டார்க் விக்கெட் கீப்பரிடம் பந்தை வீச, உடனே அவரும் அவுட் ஆக்கினார். என்ன நடந்தது என தெரியாமல் அசார் அலி குழம்பிக்கொண்டு நடுவரிடம் சென்றார். பந்து பவுண்டரி கோட்டை தொடவில்லை என நடுவர் விளக்கியதும் ஏமாற்றத்துடன் அசார் பெவிலியனுக்கு நடையை கட்டினார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

SHARE