ஓரினச் சேர்க்கையாளர்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்!

62

ஓரினச்சேர்க்கைக்கு ஒரு சில நாடுகள் அனுமதி அளித்துவிட்ட போதிலும், அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் அவர்களுடைய தண்டுவட அணுவை வைத்து குளோனிங் முறையில் குழந்தையை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

எலியை வைத்து இச்சோதனையை நடத்தியதில் வெற்றி பெற்றதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய அப்பா மற்றும் அம்மாவின் அணுக்கள் இருக்கும் என்றும், அதை வைத்தே குழந்தையை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண் பாலின தம்பதியின் அணுக்கள் மூலம் உருவான குட்டிகள் ஆரோக்கியமாகவும், ஆண் பாலின தம்பதியின் அணுக்கள் மூலம் உருவானவை ஆரோக்கியம் குறைந்ததாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

SHARE