உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர்!

113
விளையாட்டு, ஒரு வீரருக்கு எவ்வளவு புகழை தேடிக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு பணத்தையும் கொட்டிக் கொடுக்கின்றது.

அவ்வாறு புகழுடன் கூடிய பணத்தை சம்பாதிக்கும் ஓர் குத்துச்சண்டை வீரர் குறித்து தான் தற்போது நாம், பார்க்க இருக்கின்றோம்.

மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரரான கானலோ அல்வரேஸ், உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், புதிய சாதனை படைத்துள்ளார்.

இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தப் படி, சுமார் 365 மில்லியன் டொலர்கள் சம்பாதிக்க உள்ளார்.

விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக மதிப்புடைய ஒப்பந்தம் என கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 365 மில்லியன் டொலர் சம்பாதிப்பார்.

டாசன் என்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நடக்கும் 11 போட்டிகளுக்கு அல்வரேஸுடன் இந்த 365 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டுள்ளது. இதன் படி ஒரு போட்டிக்கு 33 மில்லியன் டொலர்கள் கானலோ அல்வரேஸ்க்கு கிடைக்கும்.

கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்ஸி, நெய்மர் போன்றோர் அண்மைக்காலங்களில், 350 மில்லியன் டொலர்கள் வரை ஒப்பந்தம் செய்துக்கொண்டிருந்தனர். தற்போது அவர்களை விட அதிகமான மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு அல்வரேஸ், உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

SHARE