ஜனாதிபதி மைத்திரிக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு

20

ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுவரும் பல்வேறுபட்ட விடயங்களின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த உயர் அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் உண்மைத் தன்மைத் தொடர்பில் வினவுகையிலேயே அவ்வதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பான வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பின் அதிகாரிகளை அதிகரிப்பது மற்றும் கடுமையான பாதுகாப்பு வட்டாரத்தை உருவாக்குதல் தொடர்பாக விசேட அவதானமும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளுக்காக புலனாய்வுப் பிரிவினர், பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உள்ளக குழுக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இன்று விசேட அறிவித்தலொன்று வழங்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அறியக் கிடைக்கின்றது.

இதன்படியே இன்று முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

SHARE