பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அமுனுகமுவை சந்தித்தார்

31

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்துக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சர் சரத் அமுனுகவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும் இலங்கை பாகிஸ்தான் உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிய அரசினால் இலங்கை மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்  புலமைப்பரிசீல்கள் குறித்தும் உயர் ஸ்தானிகர் அறிவித்தார்.

இலங்கையின் தொழில்நுட்ப கல்விக்கான பாகிஸ்தானின் ஆதரவினையும் இதன்பொழுது உயர் ஸ்தானிகர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE