ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து மகிந்த சீற்றத்துடன் வெளியேறியது எதற்காக?

27

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க முன்னைய ஆட்சியின் போது பதவிநீக்கப்பட்டமை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிவேளை சீற்றமடைந்த முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச செய்தியாளர் மாநாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்  முன்னாள் ஜனாதிபதி தற்போதைய அரசாங்கம் சட்டஅமுலாக்கலை முன்னெடுத்தள்ள விதம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவ்வேளை செய்தியாளர் ஒருவர் முன்னைய அரசாங்கத்தில் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க எப்படி மூன்று நாட்களில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு அனைத்தும் அரசமைப்பிற்குஉட்பட்ட விதத்திலேயே முன்னெடுக்கப்பட்டது என  முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக மேலதிக கேள்விகளை தான் விரும்பவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் குறிப்பிட்ட செய்தியாளர் தொடர்ந்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார் குறிப்பாக முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின்  விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் இதற்கு பதில் அளிக்காத மகிந்த ராஜபக்ச அந்தஊடகவியலாளர்  எந்த நிறுவனத்தை சேர்ந்தவர் என கேட்டுள்ளார்.

அதற்கு குறிப்பிட்ட பத்திரிகையாளர் தான் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை சேர்ந்தவர் என தெரிவித்தவேளை மகிந்த ராஜபக்ச அவர் வேறு யாரோ ஒருவரின் சார்பில் செயற்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.

SHARE