ராகுல்காந்திக்கு ரணில் அழைப்பு

42

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

புதுடில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கை பிரதமரிற்கும் காங்கிரஸ் கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பின்போது கடல்சார்ந்த விவகாரங்கள் குறித்தும் பிராந்தியத்திற்கு பொதுவான ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்திய பிரதமரை சந்திக்கவுள்ளார்.

SHARE