ராஜபக்ஷ குடும்பம் கனவிலும் நினைக்க வேண்டாம் – ஜே.வி.பி

34

மக்கள் விடுதலை முன்னணியின்  துணையுடன் மீண்டும்  ஆட்சி பீடம்   ஏறிவிடலாம்  என்று ராஜபக்ஷ  குடும்பம்  கனவில் கூட  நினைக்க கூடாது என தெரிவித்த ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்  நலிந்த ஜயதிஸ்ஸ, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடைக்கால அரசாங்கத்திற்கு துணைநிற்க போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

பொதுஎதிரணியின் தலைமைத்துவத்திற்காக பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.   இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி  மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்கி,  கோத்பாய ராஜபக்ஷவை அரசியல் ரீதியில் முன்னிலைப்படுத்தி,  பஷில் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவில்  இருந்து முழுமையாக வெளியேற்றுவதே   இடைக்கால அரசாங்கத்தினை உருவாக்க முயற்சிப்பவர்களின்   அரசியல் இராஜதந்திரம் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமாயின்  பொதுஜன பெரமுனவுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் இணைய வேண்டும் என்று   பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலே  அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

SHARE