மன்னார் பிரதேசத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் வேளைத்திட்டம்

12
-மன்னார் நகர் நிருபர்-
இலங்கை இராணுவத்தின் 69 வது  ஆண்டு பூர்த்திளை  ஒட்டி பல்வேறு மக்கள் நலன் பெறும் வேளைத் திட்டங்களை முன்னெடுத்து செல்லும் மன்னார் பிரதேச ராணுவத்தினர் இன்று மன்னார் பேசாலை புனித பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் ஒரு தொகுதி பயன் தரும் மரக்கன்றுகளை நாட்டி வைத்துள்ளனர்.
 சுமார் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) காலை 9 மணியளவில் தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு கேணல் ஜோச் ரணசிங்க தலைமயில் இடம் பெற்ற மரம் நடும் வைபவத்தில் பேசாலை இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் சுரேஸ் உட்பட பேசாலை உதவிப் பங்குத்தந்தை , குறித்த பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள்,மாணவர்களும்  கலந்து கொண்டு மரங்களை நட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE