இலங்கை– இந்திய பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று!

19
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

இதன்போது இருநாட்டு உறவுகளை மேலும் கட்டியெழுப்புதல், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்.

அந்தவகையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை பிரதமர் ரணில் நேற்று, சந்தித்திருந்தார். மேலும் அவர், 15 பேர் கொண்ட குழுவினருடன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE