ஆப்கானிஸ்தானில் பலத்த பாதுகாப்பு மத்தியில் நாடாளுமன்ற பொது தேர்தல்

50
ஆப்கானிஸ்தானில் பலத்த பாதுகாப்பு மற்றும் தாலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற பொது தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் 250 ஆசனங்களுக்காக பல பெண்கள் உட்பட 2,500 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களால் 30 சதவீத வாக்குச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று கந்தஹார் மாகாணத்தில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், அங்கு வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE