கனடாவில் பல்லாயிரக்கணக்கான கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும்!

48
கனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டதை அடுத்து பல்லாயிரக்கணக்கான கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஞ்சாவை பயன்படுத்துவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கும் சட்டம் கனடாவில் நடப்பிற்கு வந்துள்ளது.

கஞ்சா தொடர்பிலான சிறு குற்றங்களில் தண்டனை பெற்றுள்ளோருக்கு பொது மன்னிப்பினை வழங்குவதை விரைவுபடுத்தவுள்ளதாக லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டின் தரவுகளின்படி, கஞ்சா போதைப் பொருளை தம்முடன் வைத்திருந்ததாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கனேடியர்கள் மீது குற்றச்சாட்டுக்ள இருந்தன.

இதேவேளை கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்த பின்னர், இது குறித்த குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருந்த போதிலும் கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் கஞ்சா தொடர்பிலான குற்றச்சாட்டில் ஏறக்குறைய 55,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

SHARE