சர்கார் டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா!

22

விஜய் நடித்து அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளது, சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் இந்த படத்தில் டீசர் சற்று நேரத்திற்கு முன் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்சமயம் எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் பேச்சாக தான் உள்ளது.

அப்படிப்பட்ட இந்த டீசரில் என்னென்ன விஷயங்கள் ஒளிந்துள்ளன, தெரியுமா…

1. ஆரம்பத்தில் வரும் அந்த பயங்கரமான பெண் குரல் வேறு யாரும் இல்லை, நம்ம வரலட்சுமி தான்.

2. ஒரு சண்டை காட்சியில் விஜய் வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருப்பவர்களை அடித்து துவைப்பார், அது சட்டச்சபை செட் போல தான் உள்ளது.

3. வரலட்சுமி பயங்கரமான அரசியல்வாதியாகவும் ராதாரவியே அவருக்கு கீழ் உள்ளது போலவும் தற்போதைய அரசியலை காட்டுவது போல் உள்ளது.

4. மழையில் தளபதி நனையும் காட்சியில் வழக்கம்போல கத்தியில் எப்படி தனது உதவி இயக்குனரை முருகதாஸ் தொலைக்காட்சி கேமிராமேனாக உபயோகித்து இருப்பரோ, அதே போல் பயன்படுத்தியுள்ளார்.

5.கண்டெய்னர் முழுக்க பணம், ஒரு குடும்பமே சில மாதங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்து இறந்த சம்பவத்தையும் பயன்படுத்தியுள்ளார்.

6.ஒரு காட்சியில் தளபதி முகத்தில் காயங்களுடன் நிற்பது போலவும் அவரை சுற்றி ராட்சத அளவில் focus லைட்கள், பிரமாண்டமான பேனர் போன்றவும் உள்ளதால், அது கிளைமாக்ஸ் சீனாக தான் இருக்க வாய்ப்புள்ளது.

7. டீசரில் யோகிபாபுவை அவ்வளவாக காட்டவில்லை, அதனால் படத்தில் பெரிய ரோலாக இருக்காது, அதே போல் அந்த சூட்கேஸில் இருந்து பார்க்கும் அந்த பாதி முகம் அந்த உதவி இயக்குனரது போல தான் உள்ளது.

8. இதை எல்லாத்தையும் விட முக்கியமாக டீசரில் முக்கால்வாசி சீன்களில் தளபதி பச்சை நிற சட்டையை அணிந்து வருகிறார், ஒருவேளை இதற்கும் எதாவது காரணத்தை இயக்குனர் வைத்திருக்கலாம்.

SHARE