அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

34

அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 373 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட முடிவு செய்து, பகர் சமான், சர்ப்ராஸ் அகமது தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், அவுஸ்திரேலியா 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் பாகிஸ்தான் பொறுப்புடன் விளையாட 400 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

537 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கிய போதும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர்.

முடிவில் 49.4 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அவுஸ்திரேலியா இழந்ததால், 373 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை மொகமது அப்பாஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE