திருடப்பட்ட உயர் ரகத் தேயிலைப் பொதிகளுடன் இருவர் கைது

29

கனவரல்ல பெருந்தோட்டத் தொழிற்சாலையில் திருடப்பட்ட உயர் ரகத் தேயிலைப் பொதிகள் மீட்கப்பட்டதுடன் அதே தோட்டத் தொழிலாளர்கள் இருவரை பசறைப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

மேற்படி தோட்டத் தொழிற்சாலையிலிருந்து பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்னவீர அடஸ்சூரிய தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர் குடியிருப்புத் தொகுதியை சுற்றி வலைத்தனர்.

இச்சுற்றி வலைப்புத் தேடுதலில் குடியிறுப்புத் தொகுதி வீடொன்றில் மறைத்து வைத்திருந்த உயர் ரகத் தேயிலைப் பொதிகளை பொலிஸார் மீட்டதுடன் அவ் வீட்டிலிருத இருவரைக் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட தேயிலை கனவரல்ல பெருந்தோட்டத் தொழிற்சாலையிலிருந்து திருடப்பட்டவைகளென ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட தேயிலையின் பெறுமதி மதிப்பிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இரு தொழிலாளர்களும் விசாரணையின் பின்னர் பசறை சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்களென பசறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

SHARE