மன்னார் சுப்பர் லீக் (MSLt20) கிரிக்கெட் சுற்றுத்தொடர்  ஆரம்பம்

18
மன்னார் நகர் நிருபர்
மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இருபதுக்கு இருபது தொழில் முறையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை இம்மாதம் முழுவதும் நடாத்தவுள்ளது. இதன் முதல் நாள் போட்டியானது (20-10-2018)  காலை 8.00 மணிக்கு நானாட்டான் பொது மைதானத்தில் வைபவரீதியாக அணிகளை அறிமுகப்படுத்தி வரவேற்பதுடன் ஆரம்பம் ஆனது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள், அனுசரனையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் மொத்தமாக நான்கு அணிகளை கொண்டு நடைபெறவுள்ள இந்த சுற்றுத்தொடரில் ஒவ்வொரு அணியையும் வேறுவேறு உரிமையாளர்கள் கொள்வனவு செய்துள்ளார்கள். ஓவ்வொரு அணியிலும் உரிமையாளர் உட்பட 16 வீரர்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதில் அணி உரிமையாளரோடு சேர்த்து பாடசாலை வீரர் ஒருவர், கழக வீரர் ஒருவருமாக மொத்தமாக 03 வீரர்கள் அணிபட்டியலில் உள்ளவாங்கப்பட்ட நிலையில் ஏனைய 13 வீரர்களுக்கான அதாவது நான்கு அணிக்கும் சேர்த்து 52 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த 52 வீரர்களுக்காக மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 76 வீரர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE