ஜேர்மனில் இருந்து இலங்கை வந்த இளைஞன் பரிதாபமாக மரணம்

18

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்காலை கடலில் குளித்துத் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிங்லர் ஸ்டீவன் மார்க் என்ற 34 வயதான ஜேர்மன் நாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE