மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

24
ஹற்றன், தலவாக்கலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையால்  மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவொன்று, இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த நீர்தேக்க பகுதிகளில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மலையகத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது.  இதனால் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த மழையுடனான காலநிலையால் பல பகுதிகளில் மண்சரிவு அபாயங்களுக்கும் மக்கள் முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE