லிந்துலை விபத்தில் மூவர் படுகாயம்

28

நுவரலியா, லிந்துலை பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாகசேனை நகரத்திலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி, நாகசேனை நகர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE