மெக்சிகோவில் மெய்க்காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

27
மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க கர்தினாலின் இல்லத்தின் மெய்க்காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஓய்வுபெற்ற கருதினால் நோர்பேடா றிவேராவின் (வயது-76) இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதலில் அவருடைய காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில், கர்தினாலிற்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதலுக்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாத அதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட துப்பாக்கிதாரி இராணுவ உடையில் இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SHARE