அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

17

2019 ஆம் ஆண்டு முதல் அரிசிக்குக்  கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க,  விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

சந்தையில் அரிசிக்கு நிலையான விலையைப்  பேணும் நோக்கத்துடனேயே, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது இருக்கின்ற விலையை விட,  10 ரூபாவைக்  குறைக்க ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அடுத்த மாதம் முதல் “பி.எம்.பீ.  அரிசி” என்ற அரிசி வகையை விற்பனை செய்ய, நெல் விநியோக சபை திட்டமிட்டுள்ளது.

SHARE