சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்

116

உலகில் பெரும்பாலானோர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது சர்க்கரை நோயினால் தான். முன்னர் 50 வயதிற்கு மேற்பட்டோர்க்கு வந்த சர்க்கரை நோய் தற்போது பிறக்கும் குழந்தைக்கும் கூட வருகிறது.

உடலில் இன்சுலின் சுரக்காவிட்டாலோ அல்லது இன்சுலின் சுரப்பு போதுமானதாக இல்லாவிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

மேலும் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, திடீரென உடல் எடை குறைதல் போன்றவை இருந்தால் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட சில செயல்களை கடைபிடித்து வந்தாலே அதனை விரைவாக குணப்படுத்த முடியும்.

இரத்த பரிசோதனை

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என அடிக்கடி ஏ1சி இரத்த பரிசோதனை எடுப்பதின் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அறிய உதவுகிறது. மேலும் இதன்மூலம் இரத்த சர்க்கரை அளவு உங்கள் உடல் உறுப்புகளை பாதிக்காமல் காக்க முடியும்.

இரத்த அழுத்தம்

வாரத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோயாளிகள் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். இப்படி செய்வதின் மூலம் பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம் உங்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். எனவே மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

உணவுப் பழக்கம்

நார்ச்சத்து உணவுகளான பிரட், க்ரேக்கர்ஸ், முழுதானியங்கள், அரிசி போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். குறைந்த கலோரி உணவுகள், டிரான்ஸ் கொழுப்புள்ள உணவுகள், சேச்சுரேட்டேடு கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை போன்ற உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

தண்ணீர்

செயற்கை பானங்களை அதிகமாக குடிப்பதற்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள். மேலும் தினமும் உடலுக்கு நன்மைகளைதரும் பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால், சீஸ் போன்றவற்றை உண்ணுங்கள்.

கொலஸ்ட்ரால்

எச்டிஎல் என்ற நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் பரிசோதித்து கொள்ளுங்கள். கெட்ட கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தி விடும்.

சுறுசுறுப்பாக செயல்படுங்கள்

ஒரு நாளைக்கு மூன்று தடவை 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகா, தோட்ட பராமரிப்பு மேற்கொண்டு தசைகளை வலுவாக வைத்து கொள்ளுங்கள். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

SHARE