நரம்பியல் தாக்கங்களை ஏற்படுத்தும் ரெட்ரோ வைரஸ்

131

பரம்பரையலகுகளுக்கிடையே மறைந்து வாழும் ஒரு வழமைக்கு மாறான ரெட்ரோவைரஸினால் நரம்பியல் ரீதியான வியாதிகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இப் பாதிப்பானது சாதரண மக்களிலும் பார்க்க போதைப் பொருள் பாவனையாளர்களில் அதிகமென தெரிவிக்கப்படுகிறது.

இவ் வைரசுக்கள் நரம்பு வேதியலில் மாற்றத்தை ஏற்படுத்தி சிலரில் போதைப்பொருள் அடிமைத்தனத்தை தோற்றுவிப்பதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன .

இதுவரை அறியப்பட்டதிலும் 3வது முக்கிய கொடிய ரெட்ரோவைரசுக்கள் இவையென என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒக்ஸ்போட் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றில், வெளித்தோற்றத்தில் செயலற்றுக் காணப்படும் வைரஸ் மரபணுக்கள் எவ்வாறு அருகிலுள்ள மரபணுக்களைப் பாதிக்கின்றது என்பது தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

இதன்போதே நரம்பணுக் கடத்தியான டோபமைனின் செயற்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது அறியப்பட்டுள்ளது.

இவ்வகை வைரசுக்கள் பொதுவாக RASGRF2 எனப்படும் புரதத்தொகுப்புக்குப் பொறுப்பான பரம்பரையலகுகளுக்கிடையே மறைந்து காணப்படுகின்றன.

இப் புரதமே டோபமைன் இரசாயனத்தின் உற்பத்திக்குக் காரணமான புரதம்.

மேலும் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் நீண்டகால போதைப்பொருள் பாவனையாளர்களில் இதன் தாக்கம் அதிகமாயிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து மேற்படி வைரசானது அவ்வப்போது ஒருவகைப் பழக்கத்தில் ஈடுபடும் ஒருவரை மிகத் தீவிரமாக அச்செயற்பாட்டுக்குள் உந்தித் தள்ளுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE