சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  நாணயத் தாள்களை சட்டவிரோதமாக கடத்தவிருந்தவர் கைது

32

வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

நுகேகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், யூரோ மற்றும் இலங்கை ரூபாக்கள் உள்ளடங்குவதாக தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் இவற்றின் பெறுமதி 64 இலட்சத்து 13 ஆயிரத்து 273 ரூபா எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE