கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் இளைஞர்கள் மூவர் கைது

25

கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினர், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மூன்று இளைஞர்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

அதன்போது, அவர்களிடமிருந்து சில பீடிகள்  மீட்கப்பட்டன. அவற்றில் கஞ்சா போதைப்பொருள் தூள் கலந்திருந்தன. அதனால் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என சிறப்பு அதிரடிப் படையினர் மேலும் தெரிவி்த்தனர்.

SHARE