80 வயதானாலும் என் அணியில் டோனி ஆடுவார் – டிவில்லியர்ஸ்

47

தனது அணியில் டோனி 80 வயதானாலும் விளையாடுவார் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஆனால், அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் அவர் மீது விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில், ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில்,

‘என்னுடைய அணியில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆண்டும் டோனி விளையாடுவார். 80 வயதில் சக்கர நாற்காலியில் இருக்கும்போது கூட அவர் என்னுடைய அணியில் விளையாடுவார்.

அவர் மிகவும் அற்புதமான மனிதர். அவரது சாதனைகளை பார்த்தாலே தெரியும். அவரைப் போன்ற வீரரை நீங்கள் இழக்க விரும்புவீர்களா?.. நான் அப்படி செய்ய மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

SHARE