ரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்கள் – சிறுவர் நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்பிவைப்பு

33

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டபிரயாணிகள் ரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்கள் நால்வரை ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றம் சிறுவர் நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்பிவைத்ததாக மட்டக்களப்பு  ரயில் நிலைய பிரதம அதிபர் கே.வசந்தகுமார் தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், இதை ஒத்த சம்பவங்கள் இதற்கு முதலும் 4 தடவைகள் இடம்பெற்றள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்தத் தடவை ஏறாவூர் பொலிசாரின் தீவிர விசாரணையால் இவர்களை கைது செய்ய முடிந்தது.

சம்பந்தப்பட்ட சிறுவர்கள் நால்வரும் 15 வயதுக்கட்பட்டவர்கள், ஏறாவூர் குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் குற்றம் இழைத்ததை நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்கள்.

அதனால் அவர்களது சிறுபராயத்தை கருத்திற்கொண்ட நீதிமன்றம்.  அவர்களை சிறுவர் நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்பிவைத்துள்ளது.

இச்சம்பவங்களினால் பிரயாணிகளுக்க பாதிப்பு ஏற்படாமல் விட்டமை அதிஸ்டவசமானது. ஆயினும், ரயிலுக்கு சிற்சில பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

SHARE