அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

31

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

பொரளை சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 3 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகம் வழியாக கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லவுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் மற்றும் வெளிநாடுகளுடன் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம் போன்ற பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

உலக பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மையே எரிபொருள் விலையேற்றம் மற்றும் நாணய பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக இன்றைய அமைச்சரவை சந்திப்பிலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE