புற்றுநோய் மற்றும் இருதய நோய்களை தடுக்கும் – வெள்ளை ஸ்ட்ராபெர்ரி…

105

பைன்ஃபெரிஸ் என்பவை வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகள். இவை சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளை விட ஆரோக்கியமானவை. பைன்பெர்ரிகள் ஆன்டிஆக்சிடண்ட்கள் நிறைந்தவை மற்றும் இன்னும்பிற உடல்நல நன்மைகளையும் வழங்க வல்லவை. வட அமெரிக்காவில் பைன்பெர்ரிகளை சிலோயென்சிஸ் எனவும், அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் அதை அனனேசெர்டெபெர் என்றும் அழைக்கின்றனர்.

இரண்டு வகையான ஸ்ட்ராபெர்ரிகளின் குறுக்கு இனப்பெருக்கமே பைன்பெரீஸ் உருவாவதற்கு வழிவகுத்தது. இந்த வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகளை ஒரு சிற்றுண்டியாக அல்லது காலை உணவிற்கு தயிருடன் கலக்கி சாப்பிடலாம். இது பழக்கலவையில் துண்டு துண்டாகச் சேர்த்து, அல்லது பைன்ஃபெரி ஸ்மூத்தியாகவும் மக்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ப்ரூட்பை பேக்கிங் செய்யும் பொழுது சிவப்பு ஸ்ட்ராபெர்ரிகளுக்குப் பதிலாக பைன்பெர்ரிகளைப் பயன்படுத்தப்படலாம்.

விஷத்தன்மை அழுத்தம்

பைன்பெர்ரிகள் ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்தவை. உடலில் உள்ள விஷத்தன்மை அழுத்தத்தை குறைப்பதற்கும் புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் போன்ற கடுமையான சுகாதார அபாயங்கள் வருவதைத் தடுக்கவும் உதவுகின்றன. இதனால், ஒவ்வொரு நாளும் ஒரு கப் பைன்ஃபெரியை எடுத்துக் கொள்வது உங்கள் உடலில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட் அளவை அதிகரிக்கும்.தவிர, சில ஒழுங்கற்ற வியாதிகளையே பைன்பெர்ரிகளால் குணப்படுத்தும்போது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் “சி” யின் முக்கிய ஆதாரமாக இருப்பது மற்றும் உடலுக்குத் தேவையான ஆன்டிஆக்சிடண்ட்களைக் கொண்டிருக்கும் பைன்ஃபெரிகள், மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இது பாக்டீரியாவை சமாளிப்பதில் உதவுகிறது, மேலும் பொதுவான குளிர், ஒவ்வாமை, காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் ஒரு கப் பைன்ஃபெரியை எடுத்துக்கொள்வது உங்களை மருத்துவரிடம் செல்வதிலிருந்து விலக்கி வைக்கும். தங்கள் உடலுக்கு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை உருவாக்க, மக்கள் ஸ்மூத்தீஸ் அல்லது தயிருடன் சேர்த்து இந்த பைன்ஃபெரிகளை உண்ணலாம்.

இதய ஆரோக்கியம்

உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோயினால் பாதிக்கப்படுபவர்கள், தங்கள் வழக்கமான உணவவில் பைன்பெரிகளைச் சேர்க்க வேண்டும். ஏனெனில் இதயத்தின் ரத்த அழுத்தத்தை இயல்பாக்கத்தேவையான பொட்டாசியச் சத்து நிறைந்த ஆதாரமாக இது உள்ளது.ஆரோக்கியமான இதயத்திற்கான முக்கிய ஊட்டச்சத்தான பொட்டாசியம் உதவியுடன் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். இயல்பான இரத்த அழுத்தம் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ உங்களுக்கு உதவும்.

உயர் இரத்த அழுத்தம் போன்ற அசாதாரணங்கள் இதய அடைப்பு , பக்கவாதம், குருதியோட்டக்குறை இதய நோய்களை ஏற்படுத்தும். குறைந்த இரத்த அழுத்தமானது தசைப்பிடிப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு , மற்றும் மாரடைப்புகளுக்கு வழிவகுக்கும். இதனால் பைன்ஃபெரிகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமான ஆரோக்கியம்

ஒரு முறையற்ற செரிமான அமைப்பைக் கொண்டிருப்பது அடிக்கடி அஜீரணம், உப்புசம் போன்ற பல ஆபத்துகளை விளைவிக்கிறது. ஆகையால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க போதுமான அளவிலான நார்ச்சத்துள்ள பைன்பெரிகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

போதுமான ஃபைபர் மட்டுமே கொண்டு இதய நோய் மற்றும் செரிமான பிரச்சினைகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியாது. ஆனால் இது திருப்தி மற்றும் பசிக்கட்டுப்பாடையும் வழங்குகிறது. எனவே மாலை அல்லது காலையில் ஒரு கப் பைன்ஃபெரிகளை எடுத்துக்கொள்வது துரித உணவுக்கான பசியைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவது போன்ற நன்மைகளைத் தரும்.

வயிற்றுப்போக்கு

வெள்ளை பெர்ரிகள் அளவில் சிரியதாகத் தெரிந்தாலும் இவை வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுக்கு எதிராக போராடத் தேவையான ஃபைபர் சக்தியால் நிரம்பியுள்ளன, இதனால் வயிற்று வலி அல்லது பிற செரிமான பிரச்சனைகளிலிருந்து ஒரு நபர் நிவாரணம் பெறுகிறார். இது உடலில் இருந்து கழிவுப்பொருட்களை நீக்குவதிலும் உதவுகிறது.

உற்சாகத்தை உண்டாக்குகிறது:

பைன்ஃபெரிகள் நாள் முழுவதிலும் உங்களுக்கு உற்சாகத்தை வழங்குகிறது. இந்த சிறிய வெள்ளை பெர்ரி உங்கள் உடலில் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கத் தேவையான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்குகிறது. உடற்பயிற்சி உணர்வு கொண்ட மக்கள் ஒவ்வொரு நாளும் இந்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும் என்று நினைக்கலாம், ஆனால் இது ஒரு பாலாடைக்கட்டி நிறைந்த பர்கரை கொறித்தலை விட எவ்வளவோ மேல். மேலும் காலை நேரத்தில் பைன்ஃபெரியை எடுத்துக்கொள்வது நாள் முழுவதுக்கும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும், இதனால் உடல் நலம் மற்றும் உடல் எடைக்கட்டுப்பாடு மேம்படும்.

பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கிறது:

பிறப்புக் குறைபாடுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு கவலை தரும் ஒரு பெரிய சுமை. எனவே பிறப்புக் குறைபாடுக்கான வாய்ப்புகளைக் குறைக்க, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் தினமும் ஒரு கிண்ணம் பைன்பெரிகளைச் சேர்க்கலாம். பைன்ஃபெரிகள் ஃபோலேட் நிறைந்திருப்பதால் கருவைப் பாதுகாக்கும் மற்றும் எந்தவொரு சிக்கல்களும் இல்லாமல் கருப்பையில் கரு வளர உதவும். இதனால், கருவில் வளரும் குழந்தைகளில் ஏற்பட வாய்ப்புள்ள குறைபாடுகளை பைன்பெர்ரிகள் தடுக்கலாம்.

எலும்புகள் மற்றும் பற்கள்

ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு பலரும் இக்காலத்தில் பற்கள் மற்றும் எலும்புகளின் பலவீனப் பிரச்சனையில் அகப்படுகிறார்கள். அந்த நிலையில், போதுமான அளவு வைட்டமின் “A” மற்றும் “D” யின் தேவை மிக அவசியம். வைட்டமின் “A” நோயெதிர்ப்பு மண்டலம், பார்வை மற்றும் ஒரு நபரின் வளர்ச்சியை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. அன்றாட உணவில் ஒரு கிண்ணம் பைன்ஃபெரிகள் எடுத்துக்கொள்வது ஒருவரின் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், அடிக்கடி டாக்டரிடம் செல்வதைத் தடுக்க உதவுகிறது.

பைன்ஃபெரிகளின் அனைத்துவித ஆரோக்கியமான நன்மைகளையும் கருத்தில் கொண்டு உங்கள் உடலை ஆரோக்கியமானதாகவும் ஆக்ட்டிவாகவும் இருக்கும்படி செய்ய வழக்கமான உணவு அட்டவணையில் இதை மறக்காமல் இணைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

SHARE