தலவாக்கலையில் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

26

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பஸ்  நிலையத்திற்கு முன்பாகவுள்ள கட்டடத்தின் மீது வேகமா  வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்றிரவு 10. 20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான வேனின் சாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பஸ் நிலையத்திற்கு முன்பாகவிருந்த சிறிய கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE