விண்ணை ஆக்கிரமிக்கப்போகும் ஏர் டாக்ஸிக்கள்

74

டாக்ஸி சேவையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் பல்வேறு நாடுகள் முனைப்புக்காட்டி வருகின்றன.

இவற்றுள் சிங்கப்பூரானது மிக வேகமாக செயற்பட்டு வருகின்ற நாடாக காணப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஏர் டாக்ஸி சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரோன் விமானங்களின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஏர் டாக்ஸிக்கள் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை ஏற்றிச் செல்லக்கூடியன.

அதே நேரத்தில் ஒரே பறப்பில் சுமார் 30 கிலோ மீற்றர்கள் வரையும் பறந்து தமது சேவையினை வழங்கக்கூடியதாகவும் இருக்கின்றன.

இச் சேவையின் ஊடாக சூழலில் உண்டாக்கப்படும் அதிகளவு வாகன இரைச்சல்கள் குறைக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தவிர டுபாய் ஏற்கணவே இவ்வாறான பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன், ஜேர்மனியும் இவ்வாறான முயற்சியினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE