விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்

29

பாங்காங்கில் இருந்து மும்பைக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில், இளைஞர் ஒருவர் சக பெண் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணிகள் விமானம் ஒன்று பாங்காங்கில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த சந்திர திருப்பதி எனும் நபர் விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு மும்பைக்கு சென்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில், அதிகாலை நேரம் என்பதால் விமானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டபோது, தன்னுடன் பயணித்த பெண் பயணியை அவர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, சத்தம் போட்ட அந்த பெண் பயணி விமான பணிப்பெண்களை அழைத்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும், மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சந்திர திருப்பதியை கைது செய்தனர்.

அதன் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தவிட்டார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி, தெரியாமல் தவறு நடந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SHARE