இணைய உலகை ஆக்கிரமித்த அழகிய காதல் புகைப்படம்

36

அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவர் மலை உச்சியில் மலர்ந்த அழகிய காதலை புகைப்படம் எடுத்து வெளியிட்டதையடுத்து அந்த புகைப்படம் இணைய உலகை ஆக்கிரமித்துள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள தேசியப் பூங்காவுக்குச் சென்ற புகைப்படக்காரர் மேத்யூவ் டிப்பில், இயற்கையின் ரம்மியமான சூழலை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவரது கண்ணில் அப்படியொரு அழகிய காட்சி தென்பட்டது. மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான். அந்தப்பெண் ஒரு தேவதை போன்று காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

சினிமா போன்று இருந்த காட்சியை புகைப்படம் எடுத்துவிட்டு வேகமாக மலையில் உச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காதல் ஜோடி அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.

அக்டோபர் 17-ம் தேதி இந்தப் புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்டார். அதில், “ இணையதளமே நான் உன்னுடைய உதவியை நாடுகிறேன்.

அந்தக்காதல் ஜோடியைக் காண நான் ஆவலாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்தை அவர் பதிவிட்டது தான் தாமதம் லைக், ஷேர்கள் குவிந்தன.

மேலும் இந்தப்புகைப்படத்தை எடுத்ததற்காகப் பாராட்டுகளும் குவியத் தொடங்கியுள்ளது. சிலர் உங்கள் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளனர்.

SHARE