நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
இதன்போது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரின் சேவையை மதிப்பிடுவது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன.
இதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர்.