ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை தொடர்பான கலந்துரையாடல் – ஐ. நா

34
ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மாநாட்டில் முன்னெடுக்கப்படும்  விசாரணைகளை தடுக்கும் செயன்முறையில் சீனா தோல்விகண்டுள்ளது.

மியன்மார் இராணுவ வீரர்களைக் கொண்டு ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொன்று குவித்த குற்றத்தை விசாரணை செய்வதற்காக 15 பேர் கொண்ட குழுவை அமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலொன்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

மியன்மாரின் விவகாரத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் மர்சூக்கி தருஸ்மன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்ய மக்களுக்கு எதிரான குறித்த தாக்குதல் இன்னமும் அப்பகுதியில் இடம்பெற்று வருவதாக தலைவர் மர்சூக்கி தருஸ்மன் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வருடம் அகதிகளாக துரத்தப்பட்ட 700,000 ரோஹிங்யா மக்கள், தற்போது பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் சீவனோபாயத்திற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக தலைவர் மர்சூக்கி தருஸ்மன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், மியன்மாரின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளது.

மியன்மாரின் இனப்படுகொலைக் குற்றச்சாட்டைப் பற்றிய கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு வாக்கெடுப்பு மேற்கொண்டபோது, பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட மேலும் 6 நாடுகள் ஒப்புதல் வாக்கை மேற்கொண்டுள்ளதுடன் சீனா, ரஷ்யா, பொலிவியா, ஈகுவடோர் குனீ ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

குறித்த ஒரு நாட்டுக்குள் இடம்பெறும் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு உடன்பாடில்லையென கடந்த இரு வாரங்களுக்கு முன்னமே இரு நாடுகளும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE