போர்னா கோரிக் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

48
வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில், குரேஷியாவின் முன்னணி வீரரான போர்னா கோரிக் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இரண்டாவது சுற்று போட்டியில், குரேஷியாவின் முன்னணி வீரரான போர்னா கோரிக், பிரான்ஸின் லூகாஸ் பியூலியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போர்னா கோரிக் முதல் செட்டை 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் பியூலியிடம் இழந்தார்.

இதனைதொடர்ந்து, ஆக்ரோஷமாக மீண்டெழுந்த போர்னா கோரிக், 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதி போட்டியில் போர்னா கோரிக், தென்னாபிரிக்காவின் கெவீன் ஆண்டசனை எதிர்கொள்ளவுள்ளார்.

SHARE