ஆல்ரவுண்டர் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

48

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2004-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

செப்டம்பர் 2016 க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத பிராவோ தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஆனாலும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்துடன் ஏற்பட்ட மோதலால் அவர் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

SHARE