அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் – பிரதமர்

45

ஜெனீவா தீர்மானத்தில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில் காணப்படும் சில விடயங்கள் குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் மார்ச்மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின்  அமர்வின் போது அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் சர்வதேச சமூகம் இலங்கை விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை பின்பற்றுவதாக சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை இராணுவ அதிகாரியை மாலியிலிருந்து திருப்பியழைக்குமாறு ஐக்கியநாடுகள் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அமைச்சரவை கூட்டத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

SHARE