2018 உலகில் சிறந்த வீதிகளைக் கொண்ட நாடுகள்!

45
வீதிகளின் தரம், பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு உலகில் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறந்த வீதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை  உலக பெருளாதார மன்றம் (WORLD ECONOMIC FORUM)வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் 2018ஆம் ஆண்டின் உலகில் சிறந்த வீதி வசதிகள் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர்க்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் ஸ்விட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடம்பிடித்துள்ளன.

ஆசியாவிலிருந்து ஹாங்காங், ஜப்பான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களில் காணப்படுகின்றன.

மேலும் வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் இருந்து இந்த முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை வீதிகளின் வசதிகள் பட்டியலில் இந்தியாவிற்கு 55ஆவது இடம் கிடைத்துள்ளது.

SHARE