உலக சாதனை படைத்த விராட் கோஹ்லி

47

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

அணித்தலைவர் விராட் கோஹ்லி இந்தப் போட்டியில் 81 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

கோஹ்லி இதுவரை 213 ஒருநாள் போட்டிகளில் 205 இன்னிங்ஸ்களில் களமிறங்கி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் 36 சதங்கள் மற்றும் 49 அரை சதங்கள் அடங்கும்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் இதனை செய்திருந்தார். கோஹ்லி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரர் மற்றும் உலகளவில் 13வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

SHARE