றக்பி விளையாட்டு ஜப்பானின் யோகோஹாமாவில் நடைபெறவுள்ளது.

42

றக்பி விளையாட்டு உலகில் பலம் பொருந்திய அணிகளான நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும், பிளெடிஸ்லோ கிண்ண தொடருக்கு தனிச் சிறப்பு உண்டு.

இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான போட்டி ஜப்பானின் யோகோஹாமாவில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து இத்தொடரில் இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது. கடந்த 18ஆம் திகதி சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில், நியூசிலாந்து அணி 38-13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இரண்டாவதாக கடந்த 25ஆம் திகதி ஒக்லாந்தில் நடைபெற்ற போட்டியில், 40-12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. அத்தோடு, கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நியூசிலாந்து அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 1931ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடருக்கு, இரு நாடுகளையும் தவிர்ந்து உலகெங்கிலும் தனி இரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றால் அது மிகையாகாது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தொடரில் 46 முறைகள் நியூசிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஒட்டுமொத்த போட்டிகளின் அடிப்படையில், 1529 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. 1452 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

மொத்தமாக இரு அணிகளும் 140 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 36 போட்டிகளில் அவுஸ்ரேலியாவும், 98 முறை நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளன. 6 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.

SHARE