இப்படி பட்டவர் தமிழரின் கலாச்சாரத்தை காக்க முடியுமா? – வைத்திய  கலாநிதி சி.சிவமோகன்

61
நேற்றைய தினம்  (25.10.2018) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய  கலாநிதி சி.சிவமோகன் அவர்களின் அலுவலகத்தில் இடம் பெற்ற  ஊடக அறிவிப்பில்   முன்னால் முதலமைச்சர் கலாச்சாரத்தினை காக்கப்போவதாக கூறியிருந்தார் அதற்க்கு கருத்து தெரிவித்த எம்.பி பாலியல்  குற்றவாளி பிரேமானந்தாவின் சீடர் இவர்! பாலியல் குற்ற ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்ட பிரேமானந்தாவின்  சீடர்களுக்கு எமது மண்ணிலேயே வக்காளத்து வாங்கிய ஒருவர் இப்படிப்பட்டவர் தான் எமது கலாச்சாரத்தினை காக்க போகின்றாரா??
13 சிறுமிகளை பாலியல் பலாத்க்காரம் செய்து சிலரினை கொலை செய்த கூட்டம் தான் இவர்கள் அதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமானந்தா சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் தான் இவர். இவர்களினை பற்றிய விடியோக்கள்  எங்களிடம் உள்ளது போட்டு காட்டுவோம் தேர்தல் மேடையில் அப்போ மக்கள் தீர்மானிக்கட்டும் கலாச்சாரத்தினை காக்கப்போகும் மனிதர் இவர்தானா என்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……
இந்திய பிரதமர் மோடியுடன் சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மோடியுடன் உரையாட இவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது மாவை சேனாதிராஜா ஐயா கூட மேடையின் கீழே தான் இருந்தார் அவ்வாறு சேர்ந்து இருக்க கொடுக்கப்பட்ட  சந்தர்ப்பத்தில்  எமது அரசியல் கைதிகள் விடுதலை பற்றியோ அல்லது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அப்பாவித்தனமாக பிடிபட்ட கைதிகள் அவர்களின் விடுதலை பற்றியோ பேசாமல்  பாலியல் பிரேமானந்தா சாமியுடன் சேர்ந்து இந்த குற்றங்களில் ஈடுபடத்திற்க்காக  கைது செய்யப்பட்ட சீடர்களை  விடுவிக்க சொல்லி  எழுத்து மூலம்  கடிதம்  சமர்ப்பித்திருந்தார்.   இப்படிப்பட்டவரா தமிழரின் கலாச்சாரத்தை காக்க முடியும் இப்படி பட்டவர் எமக்கு தேவையா???  மக்களே சிந்தியுங்கள்!!!!!
 என  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் அவர்கள் தனது  அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்தினை வெளியிட்டது குறிப்பிட தக்கது.
SHARE